வைரல் ஆகும் "பொன்னியின் செல்வன்" திரைப்பட ஒளிப்பதிவாளரின் புகைப்படம் உள்ளே
´பொன்னியின் செல்வன்´ படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனை நடிகர் கார்த்தி புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
´பொன்னியின் செல்வன்´ படத்தின் படப்பிடிப்பு தற்போது, மத்தியப் பிரதேசம் மாநிலம் மகேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் புகைப்படம் பகிர்ந்து, ´´வானின் மாயாஜாலம். ஒரு மாற்றத்துக்காக நான் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை படமெடுத்துள்ளேன்´´ என்று குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பு தற்போது மகேஸ்வரில் நடைபெற்று வருவதை கார்த்தி உறுதி செய்துள்ளார்.
மேலும் ராஜ ராஜ சோழனாக நடிக்கும் நடிகர் ஜெயம் ரவி தனது காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதை வருத்தத்துடன் அறிவிக்க, நடிகர் கார்த்தி அவருக்கு வந்தியத்தேவனாக, ´´அரசே! நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் மீதமிருக்கின்றன´´ என ட்விட்டரில் ஆறுதல் கூறினார்.